ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை கேரள முதல்வரிடம் நேரில் வழங்கினார் டி.கே.எஸ். இளங்கோவன்

ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை கேரள முதல்வரிடம் நேரில் வழங்கினார் டி.கே.எஸ். இளங்கோவன்

ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை கேரள முதல்வரிடம் நேரில் வழங்கினார் டி.கே.எஸ். இளங்கோவன்
Published on

ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேரில் வழங்கினார் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்.

தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை சட்டம் 2022 என்ற புதிய சட்ட முன்வடிவை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. அதன் நகலை இணைத்து 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் “மத்திய அரசின் நீட் அறிமுகம், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மாநில அரசுகளால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் மருத்துவ நிறுவனங்களின் சேர்க்கை உரிமைகளை பறிப்பதன்மூலம், அரசியலைப்பு அதிகார சமநிலை சேதப்படுகிறது.

நீட் தேர்வால், மாநில அரசின் மருத்துவ நிறுவனத்தில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க, மாநில முதல்வர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதற்கு உங்கள் ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறேன். உங்களின் மாநிலங்களிலும் கிராமப்புறங்கள், சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள உயர்க்கல்வி சேர்க்கையில் உள்ள சிக்கல் பற்றிய ஆவணங்களை ஆய்வு செய்து, அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க உறுதிசெய்ய, எங்களுக்கு ஆதரவு கொடுக்கவும்” என்று ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

இவற்றுடன் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை அனைத்து மாநில மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்து இணைத்து முதல்வர் சார்பில் அனுப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில், நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் நீட் தேர்வு குறித்த ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையையும் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் வழங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com