தமிழகத்தில் இத்தனை பள்ளிகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதா!!

தமிழகத்தில் இத்தனை பள்ளிகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதா!!
தமிழகத்தில் இத்தனை பள்ளிகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதா!!

தமிழகத்தில் 5583 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன என்று தமிழக அரசு மதுரைக்கிளையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

2021-2022 ஆண்டில், தமிழகத்தில் 2,553 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. 2022-2023ல் 100 கோடி ஒதுக்கப்பட்டு 3030 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் அகற்றப்பட உள்ளதாக தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த சமூகநல ஆர்வலர் செந்தில் முருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளி, உயர்நிலைபள்ளி, மேல்நிலைபள்ளிகலூம் அங்கன்வாடி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலான பள்ளிகள் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. பல பள்ளிகூடங்களின் மேற்கூரை மற்றும் கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மதுரை, கோவை, நெல்லை, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கட்டிடங்களின் மேற்கூரை இடிந்தும் விழுந்துள்ளது.

ஆனால், உயரிழப்புகள் இல்லை குறிப்பாக மதுரை கொடிமங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. எனவே, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அங்கன்வாடி கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து அதில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடம் கட்ட கமிட்டி அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,

*தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

* 2021-2022 ஆண்டும் தமிழகத்தில் 2,553 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன.

*2022-2023ல் 100 கோடி ஒதுக்கப்பட்டு, 3,030 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் அகற்றப்பட உள்ளன.

*3745.28 கோடி நபார்டு கடன் திட்டத்தின் மூலம் 6,941 பள்ளிகளுக்கு 40,043 வகுப்பறைகள், 3,146 அறிவியல் ஆய்வகங்கள், 10,470 கழிப்பறைகள், 5,421 பள்ளிகளுக்கு குடிநீர் வசதிகள், 8,28,387 மீட்டரில் சுற்றுச்சுவர் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

* 106.78 கோடி செலவில் 2,695 பள்ளிகளில் 32 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 436 கழிவறைகள், 2,270 பள்ளிகளுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டு வருகிறது" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com