ராணுவத்தில் பணியாற்றினால் மட்டுமே அரசு வேலை?

ராணுவத்தில் பணியாற்றினால் மட்டுமே அரசு வேலை?
ராணுவத்தில் பணியாற்றினால் மட்டுமே அரசு வேலை?

அரசு வேலையில் சேர கட்டாயம் 5 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்திய ராணுவத்தில் 7,000 அதிகாரிகள் மற்றும் 20,000 வீரர்கள் பற்றாக்குறை உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள நிலைக்குழு, அதற்கு தீர்வாக கெசட் ஆப்பிசர்ஸ் என்ற மேல் நிலை அரசு பணிகளுக்கு விண்ணப்பபிவர்கள் கட்டாயம் 5 ஆண்டு ராணுவத்தில் பணியாற்றவேண்டும் என்ற முறை கொண்டு வரப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

 விமானப்படை, கடற்படையில் 150 அதிகாரிகள், 15,000 வீரர்கள் என காலி பணியிடங்கள் உள்ளதையும் நாடாளுமன்ற நிலைக்குழு குறிப்பிட்டுள்ளது. அந்த பரிந்துரையில், மத்திய அரசு பணியில் 30 லட்சம் பேரும், மாநில அரசு பணிகளில் 2 கோடி பேரும் பணியில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  அத்துடன் கட்டாய ராணுவ சேவை மூலம் மட்டுமே ராணுவத்தில் தன்னிறைவு பெற முடியும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் மத்திய பயிற்சி அமைப்புகள் மூலம், இதனை நடைமுறை படுத்தலாம் எனவும் யோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com