"அவங்க ஆசிரியர் இல்ல; எனக்கு இன்னொரு அம்மா" - முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாணவி நந்தினி நெகிழ்ச்சி!

+2 பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினி புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார்.

புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த மாணவி நந்தினி, "12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்தது ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. என் மீது ஆசிரியர்கள் முழு நம்பிக்கை வைத்திருந்தனர். ஆசிரியர்களிடம் எப்போது சந்தேகம் கேட்டாலும் கற்று கொடுத்தனர்; தமிழ் தாய்மொழி என்று ஆசிரியர் உணர வைத்தார். வீட்டில் மட்டும்தான் படித்தேன்; எங்கும் சிறப்பு வகுப்புக்கு செல்லவில்லை.

அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று என்னை பெற்றோர் வற்புறுத்தவில்லை. பட்டயக் கணக்காளர் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை” என்று மகிழ்ச்சியுடன் பேசினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com