பட்டப்படிப்பு,மதிப்பெண் சான்றிதழ், விடைத்தாள் நகல் பெற 18% ஜிஎஸ்டிவரி: அண்ணா பல்கலைக்கழகம்

பட்டப்படிப்பு,மதிப்பெண் சான்றிதழ், விடைத்தாள் நகல் பெற 18% ஜிஎஸ்டிவரி: அண்ணா பல்கலைக்கழகம்
பட்டப்படிப்பு,மதிப்பெண் சான்றிதழ், விடைத்தாள் நகல் பெற 18% ஜிஎஸ்டிவரி: அண்ணா பல்கலைக்கழகம்

பட்டப்படிப்பு, மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ளுதல், விடைத்தாள் நகல் உள்ளிட்டவற்றுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்குதல், செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடுதல் உள்ளிட்ட பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த உடன், அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணி மட்டும் அதன் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு இடப்பெயர்வு சான்றிதழ் வழங்குதல், பட்டப்படிப்பு, மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ளுதல், தொலைந்துபோன சான்றிதழ்களுக்கு மாற்றாக புதிய சான்றிதழ்கள் வழங்குதல், விடைத்தாள் நகல் கோருதல் உள்ளிட்டவற்றுக்கு 18% GST வரி விதிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இருப்பினும் வழக்கமான தேர்வுக்கட்டணம், பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்று விநியோகம், மதிப்பெண் சான்றிதழ், மறு மதிப்பீடு, மறுகூட்டல் ஆகியவற்றுக்கு GST வரியில் இருந்து விலக்கு தரப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com