கல்வி
12-ம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு இன்று நடைபெறுகிறது - அரசுத் தேர்வுகள் இயக்ககம்
12-ம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு இன்று நடைபெறுகிறது - அரசுத் தேர்வுகள் இயக்ககம்
கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வை கொரோனா அச்சம் காரணமாக எழுதாமல் போனவர்களுக்கான மறுவாய்ப்பு தேர்வு இன்று நடைபெறுகிறது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறுகையில், “மாநிலம் முழுவதும் 289 தேர்வு மையங்களில் நடைபெறும். மறுவாய்ப்பு தேர்வை 743 பேர் எழுத உள்ளனர். சென்னையில் மட்டும் 20 தேர்வு மையங்களில் 101 மாணவர்கள் மறு வாய்ப்பு தேர்வை எழுத உள்ளனர். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்காக பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வுப் பணியில் அந்தந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். ஆகஸ்ட் முதல் வாரத்தில் இதன் முடிவுகள் வெளியிடப்படும்” எனத் தெரிவித்துள்ளது.