பாலியல் துன்புறுத்தலால் கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: ஓபிஎஸ் இரங்கல்
பாலியல் துன்புறுத்தலால் கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்திருக்கிறார்
இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும், பாலியல் துன்புறுத்தலால் இறக்கும் கடைசி பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ள செய்தியும் என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த மாணவிக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.