\
ஆக. 10 காலை 9.30 மணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - அரசு தேர்வுகள் இயக்ககம்

ஆக. 10 காலை 9.30 மணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - அரசு தேர்வுகள் இயக்ககம்

ஆக. 10 காலை 9.30 மணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - அரசு தேர்வுகள் இயக்ககம்
Published on: 

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த கைபேசி எண்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com