கல்வி
தேர்வு ஆரம்பிக்கும் முன்பே முடிவு தேதிகள் அறிவிப்பு
தேர்வு ஆரம்பிக்கும் முன்பே முடிவு தேதிகள் அறிவிப்பு
தேர்வு ஆரம்பிக்கும் முன்பே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் கடந்த 6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 2 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் 8-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 19 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 12 ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். முதன் முறையாக பொதுத் தேர்வு முடிவு தேதி தேர்வு தொடங்குவதற்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.