10% இடஒதுக்கீடு: குறைந்த கட் ஆஃப்பில் இளைஞருக்கு அஞ்சலக பணி
எஸ்பிஐ, பெல் போன்றவற்றைத் தொடர்ந்து கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதிலும், மற்ற இட ஒதுகீட்டுப் பிரிவினரை விட குறைவான மதிப்பெண்ணைக் கொண்டிருந்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு பணி கிடைத்துள்ளது.
4 ஆயிரத்து 442 கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள் பணியிடங்களுக்கு, பணியில் சேர 10-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தேர்வு பெற்றோருக்கான பட்டியலை அஞ்சல் துறை வெளியிட்டிருந்தது. அதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை விட, குறைவான மதிப்பெண் பெற்ற பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் பிரிவைச் சேர்ந்த ஒருவர் பணிக்கு தேர்வாகியிருந்தது தெரியவந்தது.
அதாவது 42 விழுக்காடு மதிப்பெண்ணைப் பெற்றிருந்த அவருக்கு பணி கிடைத்துள்ளது. எஸ்பிஐ வங்கி தேர்வில் , மற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை விட பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு குறைவான கட் ஆஃப் நிர்ணயமானதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது கிராமப்புற அஞ்சலக ஊழியர் பணி நியமனத்திலும் இதேபோன்று நிகழ்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.