\
மே 16ல் வெளியாகிறது ப்ளஸ்2 தேர்வு முடிவுகள்

மே 16ல் வெளியாகிறது ப்ளஸ்2 தேர்வு முடிவுகள்

மே 16ல் வெளியாகிறது ப்ளஸ்2 தேர்வு முடிவுகள்
Published on

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ஆம் வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுதி உள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.   

மேலும் கடந்த ஆண்டு வரை பொதுத்தேர்வுகளின் முடிவுகளை ஊடகங்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் சென்று பெறும் நிலை இருந்தது. ஆனால் தற்போது ஊடகங்கள் பொதுத்தேர்வுகளின் முடிவுகளை இணையதளம் வாயிலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய முறையை தேர்வுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுக்கும் இந்த முறையை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்ய ஊடகங்களுக்கு தேர்வுத்துறை அறிவுருத்தியுள்ளது. 

எனவே வரும் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஊடகங்களும் www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையத‌ளங்களில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com