கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது, அவரது தம்பி மனைவி புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தம்பி ஜோரோவர் சிங். இவரது மனைவி அகன்சா ஷர்மா. கருத்துவேறுபாடு காரணமாக 2014-ல் இவர் விவாகரத்து பெற்றார். இவர் பிக்-பாஸ் போட்டியில் பங்கேற்றபோது, யுவராஜ் சிங் குடும்பத்தினர் மீது பகீர் புகார் கூறியிருந்தார். தனது மாமியார், உடனடியாக கர்ப்பமாகுமாறு கூறியதால் கணவரை பிரிந்து வந்துவிட்டேன் என்றும் தேனிலவுக்குச் சென்றபோது கூட குடும்பமே வந்து தன்னை தொந்தரவு செய்தது என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் குருகிராம் காவல் நிலையத்தில் இவர், புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், யுவராஜ் சிங், அவரது அம்மா ஷப்னம் , தம்பி ஜோரோவர் ஆகியோர் தன்னை மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் புகாரில் கூறியுள்ளார். இந்தப் புகாரை அவரது வழக்கறிஞர் சுவாதி சிங் மாலிக் கொடுத்துள்ளார்.