காதல் மோசடியில் கர்ப்பமான சிறுமி : காரணமான இளைஞர் போலீசில் சரண்

காதல் மோசடியில் கர்ப்பமான சிறுமி : காரணமான இளைஞர் போலீசில் சரண்

காதல் மோசடியில் கர்ப்பமான சிறுமி : காரணமான இளைஞர் போலீசில் சரண்
Published on

திருச்சியில் காதலித்து ஏமாற்றிய இளைஞர் போலீசில் சரண் அடைந்த நிலையில், அவரால் கர்ப்பமான சிறுமி விஷம் குடித்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்தவர் பகவன்பட்டியை சேர்ந்த ராம்கி. இவர் முன் ஜாமீன் பெற்று மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி விஷமருந்தி ஆபத்தான முறையில் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்து ஏமாற்றப்பட்ட சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com