சென்னையில் மெக்கானிக் இளைஞர் படுகொலை

சென்னையில் மெக்கானிக் இளைஞர் படுகொலை

சென்னையில் மெக்கானிக் இளைஞர் படுகொலை
Published on

சென்னையில் கொருக்குப்பேட்டை பகுதியில் 28 வயதான மெக்கானிக் இளைஞர் கொலை செய்யப்பட்டார். அவரது சடலத்தை அடையாளம் தெரியாத நபர்கள் சாலையில் வீசிச் சென்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

‌தகவல்‌ அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட மெக்கானிக்கின் பெயர் அந்தோணி என்பதும், மனைவி மற்றும் இரு குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்விரோதம் காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு காரணமாக என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com