அடையாளம் தெரியாத இளைஞர் வெட்டிக்கொலை- மதுரையில் பயங்கரம்
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தின் எதிர்ப்புறம் உள்ள மாநகராட்சி சுகாதார வளாகத்திற்கு வெளியே 20 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரை, மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் இறந்த இளைஞர் வடமாநில இளைஞர்போல இருப்பதாகவும் வேலைக்கு வந்த இடத்தில் வழிப்பறி கும்பல் கைவரிசை காட்டி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பேருந்து நிலையம் எதிரே காலை நேரத்தில் நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் இரண்டு நாட்களில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் ஒரேகாவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்றது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.