வாகனத்தை வழிமறித்து இளைஞர் வெட்டிக் கொலை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

வாகனத்தை வழிமறித்து இளைஞர் வெட்டிக் கொலை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

வாகனத்தை வழிமறித்து இளைஞர் வெட்டிக் கொலை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
Published on

ஊத்துக்கோட்டையில் திருமண நிகழ்வுக்குச் சென்று திரும்பிய இளைஞரை 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராபின் (26).இவர் நேற்றிரவு ஊத்துக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு சென்று விட்டு தமது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர் ராபினை வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து வந்த ஊத்துக்கோட்டை காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com