ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது
Published on

ஊத்தங்கரையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவனி சமத்துவபுரத்தில் வசித்து வரும் கோவிந்தன் என்பவரின் மகன் பிரட்லீ (22) இவர், 16 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பல நாள் பாலியில் தொல்லை கொடுத்துள்ளார்.

இதில், சிறுமி கர்ப்பமான நிலையில், இது குறித்து ஊத்தங்கரை மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயுடன் சென்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து தலைமறைவாக இருந்த பிரட்லீயை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் நரிபள்ளி பகுதியில் பதுங்கி இருந்த பிரட்லீயை ஊத்தங்கரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com