குற்றம்
சென்னை: மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் கைது
சென்னை: மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் கைது
சென்னையில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தண்டையார்பேட்டையை சேர்ந்த தினேஷ் என்பவர் தனது மாமியார் வீட்டின் அருகே வசித்து வந்த மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு ஆபாச படத்தை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண், நடந்தவற்றை தனது தாயிடம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. பின்னர், தினேஷை காவல் துறையினர் கைது செய்தனர்.