குற்றம்
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 18 வயது பூர்த்தியாகாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தீதையா என்பவரது மகன் தினேஷ்குமார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
அதனால் பாதிக்கப்பட்ட மாணவி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தினேஷ்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.