\
நண்பனின் பைக்கிற்கு ஆசைப்பட்டு கால்வாயில் தள்ளிவிட்ட இளைஞர் - 3 நாட்களாக கிடைக்காத சடலம்

நண்பனின் பைக்கிற்கு ஆசைப்பட்டு கால்வாயில் தள்ளிவிட்ட இளைஞர் - 3 நாட்களாக கிடைக்காத சடலம்

நண்பனின் பைக்கிற்கு ஆசைப்பட்டு கால்வாயில் தள்ளிவிட்ட இளைஞர் - 3 நாட்களாக கிடைக்காத சடலம்
Published on

பொள்ளாச்சி அருகே நண்பன் வைத்திருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் மீது ஆசைப்பட்டு அவரது நண்பனே கால்வாயில் தள்ளிவிட்ட விபரீதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆதியூரைச் சேர்ந்தவர் சரோஜினி என்பவரது மகன் புருஷோத்தமன். பொள்ளாச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு 3 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பைக் வாங்கினார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாததால் அவரது தாயார் வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து வழக்கு பதிவுசெய்த போலீசார் அவரை தேடிவந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பர் சேத்துமடையை சேர்ந்த உதயகுமாரிடம் இருந்து புருஷோத்தமனின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்திற்கு ஆசைப்பட்டு அவரை அழைத்துச்சென்று காண்டூர் கால்வாயில் தள்ளிவிட்டதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த போலீசார் கடந்த 3 தினங்களாக புருஷோத்தமனின் உடலை திருமூர்த்தி அணை, கால்வாய் பகுதியில் தேடி வருகின்றனர்.

ஆனால் இதுவரை உடல் கிடைக்கவில்லை. தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனையடுத்து உதயகுமார் மீது பைக் திருடியது மற்றும் கொலை வழக்கு பதிவுசெய்து அவிநாசி சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com