\
விளாத்திகுளம்: பள்ளி மாணவி கர்ப்பம் - கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது

விளாத்திகுளம்: பள்ளி மாணவி கர்ப்பம் - கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது

விளாத்திகுளம்: பள்ளி மாணவி கர்ப்பம் - கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது
Published on

விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் அன்புதாசன்(20). இவர் அரசு‌ உறுப்பு கல்லூரியில் மூன்றாமாண்டு பி.ஏ. படித்து வருகிறார். இவர் அதேபகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்த நிலையில் அவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். இதனால், அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

இந்த விவகாரம சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். இதையடுத்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அன்புதாசனை கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com