புதுக்கோட்டை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய இளைஞர் கைது

புதுக்கோட்டை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய இளைஞர் கைது

புதுக்கோட்டை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய இளைஞர் கைது
Published on

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது உறவுக்கார இளைஞரான முருகன் என்பவர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமியுடன் தனிமையில் இருந்தபோது செல்போனில் எடுக்கப்பட்ட ஆபாச படங்களை சிறுமியின் தாயிடம் காட்டி சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.


இதுகுறித்து சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், போக்சோ, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் மூன்று நாட்கள் முருகனை நீதிமன்ற காவலில் எடுத்து உள்ள போலீசார் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதோடு அவர் எடுத்த ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் ஏதேனும் பரப்பினாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com