\
கஞ்சா விற்ற இளைஞர்கள் : கையும், களவுமாக பிடித்த போலீஸ்

கஞ்சா விற்ற இளைஞர்கள் : கையும், களவுமாக பிடித்த போலீஸ்

கஞ்சா விற்ற இளைஞர்கள் : கையும், களவுமாக பிடித்த போலீஸ்
Published on

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 இளைஞர்களை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

சென்னை அடையார், சாஸ்திரி நகர் காவல் எல்லைக்குட்பட்ட புளுகிராஸ் சாலையில் நேற்றிரவு சட்ட விரோதமாக இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக அடையார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், சிலர் கஞ்சா விற்பனை செய்வதை கண்டறிந்தனர்.

பின்னர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விஜய் (19), வசந்த குமார் (19), பிரவின் குமார் (23), செல்வகுமார் (27) ஆகிய நான்கு பேரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா, ஒரு ஆட்டோ மற்றும் ரூ.6000 பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மற்றும் கஞ்சாவை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நான்கு பேரிடமும் சாஸ்திரி நகர் போலீசார் கஞ்சா எங்கிருந்து வாங்கப்படுகிறது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com