புதுக்கோட்டை: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை
புதுக்கோட்டையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அருகே அரசர்குளம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (22) என்ற இளைஞர் கடந்த 2020ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். சிறுமி தரப்பில் இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இதுதொடர்பாக வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் நீதிபதி சத்யா தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.
தொடர்புடைய செய்தி: கடலூர்: 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - காப்பக தாளாளர் போக்சோவில் கைது
வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, அஜித்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனையும், 35 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.