பேருந்து நிலையத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து

பேருந்து நிலையத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து
பேருந்து நிலையத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து

ஒசூர் அருகேயுள்ள சூளகிரியில் பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த இளைஞர் மீது 4பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சூளகிரி பேருந்து நிலையத்தில் மவுலா என்ற இளைஞர் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார். அங்கு வந்த அவரது நண்பர்கள் இருவர் திடீரென மவுலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மவுலா, கல்லை எடுத்து வாலிபர் ஒருவரது தலையில் அடித்தார். பின்னர் பைக்கில் வந்த இருவர், மவுலாவை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் வலது கை, காது பகுதி உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மவுலாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மவுலா, பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி குடித்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் மற்றும் மாணவ, மாணவியர் கடும் அதிர்ச்சியடைந்து அலறி அடித்து ஓட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலீசார், ரத்த வெள்ளத்தில் நின்று கொண்டிருந்த மவுலாவை மீட்டு, சூளகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, ரபீக், நவாஸ், யாரப், பர்கத் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com