சிறுமியை திருமணம் செய்த இளைஞர்: குழந்தை திருமண தடைச் சட்டத்தில் கைது

சிறுமியை திருமணம் செய்த இளைஞர்: குழந்தை திருமண தடைச் சட்டத்தில் கைது

சிறுமியை திருமணம் செய்த இளைஞர்: குழந்தை திருமண தடைச் சட்டத்தில் கைது
Published on

மயிலாடுதுறை அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரையபுரம் மேலத்தெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் மகன் கோகிலவாசன் (29). இவருக்கு தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வளையவட்டம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரது மகள் கிருபாநிதியுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணமாகி, தாரிகா என்ற பெண் குழந்தை உள்ளது. அதன்பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில், கோகிலவாசன் அரையபுரம் மாரியம்மன் கோயிலில் 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலகத்திற்கு நேற்று காலை தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சமூக பாதுகாப்பு அலுவலர்கள் நிகழ்விடத்துக்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் கோகிலாவாசன் அந்த சிறுமிக்கு தாலிகட்டி திருமணம் செய்துவிட்டார்.

இதையடுத்து, சிறுமியை மீட்ட சமூக பாதுகாப்பு அலுவலர்கள் அவரை மயிலாடுதுறையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, மாவட்ட பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளர் ஆரோக்கியராஜ் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா மற்றும் போலீஸார் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோகிலவாசனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com