\
வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணுடன் காதல் - ஊராரே இளைஞரை தீவைத்துக் கொன்ற அவலம்

வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணுடன் காதல் - ஊராரே இளைஞரை தீவைத்துக் கொன்ற அவலம்

வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணுடன் காதல் - ஊராரே இளைஞரை தீவைத்துக் கொன்ற அவலம்
Published on

வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் காதல் உறவிலிருந்த நபரை ஊர் மக்களே சேர்ந்து தீவைத்து கொலை செய்த கொடூரம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

மகுவாண்ட் காவல்நிலையத்துக்கு உட்பட்ட தவையா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த அவர் வேறு சமூக பெண்ணை காதலிப்பதை அறிந்த ஊரார் அதை விரும்பவில்லை. எனவே வியாழக்கிழமை இளைஞரிடம் இது தொடர்பாக சண்டையிட்டு அடித்து தாக்கி தீவைத்துள்ளனர். பலத்த தீக்காயமடைந்த அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தவையா கிராமத்தைச் சேர்ந்த 11 பேரை கொலைவழக்கில் கைதுசெய்துள்ளனர். மேலும் இந்த கொலையில் வேறு காரணம் ஏதேனும் இருக்கிறதா? வேறு யாராவது இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா? என்பது போன்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் போகரோ தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 9ஆம் தேதி இதேபோன்றதொரு காதல் விவகாரத்தில் சித்விசாரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மீது தீவைத்து கொளுத்திய சம்பவம் ஜார்க்கண்டில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com