மதுரையில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் வழக்கறிஞர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மகபூப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவர் தனது உணவகத்தை மேம்படுத்துவதற்காக வழக்கறிஞர் செல்வக்குமார் என்பவரிடம் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தால் உணவகத்தை திறக்க முடியாத நிலையில், கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.
கடன் கொடுத்தவர் கூடுதல் வட்டி கேட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக கூறி வீடியோ வெளியிட்டு, நேற்றுமுன் தினம் தற்கொலை செய்து கொண்டார். முகமது அலி வெளியிட்டிருந்த வீடியோ அடிப்படையில் வழக்கறிஞர் செல்வக்குமார், அவரது நண்பர்கள் ஜெயந்திரசிங், மாரிமுத்து, காமாட்சி ஆகியோரை காவல்துறையினர் கைதுசெய்து, விசாரித்து வருகின்றனர்.