நண்பனின் செல்போனில் பார்த்த அதிர்ச்சி வீடியோக்கள் - விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மைகள்!

நண்பனின் செல்போனில் பார்த்த அதிர்ச்சி வீடியோக்கள் - விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மைகள்!

நண்பனின் செல்போனில் பார்த்த அதிர்ச்சி வீடியோக்கள் - விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மைகள்!
Published on

பாப்பிரெட்டிபட்டி அருகே பெண் குழந்தைகள் மற்றும் குடும்பப் பெண்களை ஆபாச படமெடுத்து மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள விழுதுபட்டி கிராமத்தைச் சேர்ந்த மனோஜ்(22), கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி விளையாடி கொண்டிருக்கும் போது மனோஜ் செல்போனை அவருடைய நண்பர் ஒருவர் வாங்கி விளையாடி கொண்டிருந்துள்ளார். தொடர்ந்து விளையாடிய பிறகு செல்போனில் சேமித்து வைத்திருந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை பார்த்துள்ளார். அதில் அப்பகுதியைச் சேர்ந்த பல சிறுமிகள் மற்றும் குடும்ப பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இருந்துள்ளது.

இது குறித்து சிறுமிகளின் உறவினர்களிடம் தகவல் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மனோஜின் செல்போனை பார்த்தபோது அதிலிருந்த வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் 5 சிறுமிகளில் ஒரு சிறுமியிடம் அத்துமீறி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வு என்பதால், அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பெண் குழந்தையை வன்புணர்வு செய்தது, மருத்துவ பரிசோதனையில் உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து மனோஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com