கர்நாடகா: தனது திருமணத்திற்கு வங்கியில் கொள்ளையடித்த இளைஞர் கைது

கர்நாடகா: தனது திருமணத்திற்கு வங்கியில் கொள்ளையடித்த இளைஞர் கைது

கர்நாடகா: தனது திருமணத்திற்கு வங்கியில் கொள்ளையடித்த இளைஞர் கைது
Published on

கர்நாடகாவில், திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதற்காக வங்கியில் கொள்ளையடித்த இளைஞர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

ஹூப்ளி நகரில் கோப்பிகார் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியில் கடந்த செவ்வாயன்று நுழைந்த முகமூடி அணிந்த நபர் ஒருவர், காசாளரை கத்தியைக் காட்டி மிரட்டி 6 லட்சத்து 39 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தன. அவற்றை ஆய்வு செய்த காவல்துறையினர், கொள்ளையடித்தது விஜயபுரத்தைச் சேர்ந்த பிரவீன் என்பதைக் கண்டுபிடித்து, அவரைக் கைது செய்தனர். விசாரணையில், தனது திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதற்காக வங்கியில் கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com