குற்றம்
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது
கன்னிவாடி அருகே 14வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்த 14வயது சிறுமிக்கு செம்பட்டி பாளையங்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சிறுமியின் தந்தை கன்னிவாடி போலீசாரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின்பேரில் கன்னிவாடி போலீசார் ஹரிஹரன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ஹரிஹரனை ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்து சிறையில் அடைத்தனர்.