\
வீட்டை விட்டு ஓடிவர மறுத்த காதலிக்கு அரிவாள் வெட்டு: காதலன் தற்கொலை

வீட்டை விட்டு ஓடிவர மறுத்த காதலிக்கு அரிவாள் வெட்டு: காதலன் தற்கொலை

வீட்டை விட்டு ஓடிவர மறுத்த காதலிக்கு அரிவாள் வெட்டு: காதலன் தற்கொலை
Published on

வீட்டை விட்டு ஓடிவந்து திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் காதலியை அரிவாளால் வெட்டிய காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவுக்கு உட்பட்ட கடனா நதி அணை அருகே உள்ளது ராஜாங்கபுரம். இந்த பகுதியில் விவசாய கூலி வேலை செய்துவருபவரின் மகளான கல்பனா, வயலுக்கு சென்றிருந்தபோது அங்கு வந்த சரவணன், அரிவாளால் கல்பனாவை சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த கல்பனாவை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவிக்கு பின்னர் பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கல்பனா கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே,  வெட்டப்பட்ட கல்பனா இறந்துவிட்டதாக கருதிய சரவணன், தனது வீட்டுக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்பனாவை சரவணன் காதலித்து வந்ததாகவும், ஆனால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய கல்பனா மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சரவணன், கல்பனாவை அரிவாளால் வெட்டியதாகவும் காவல்துறை விசாரணையில் ‌தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com