பிரியாணி கடையில் வழங்கப்பட்ட உணவில் புழு: வழக்கில் திடீர் திருப்பம்: என்ன அது?

பிரியாணி கடையில் வழங்கப்பட்ட உணவில் புழு: வழக்கில் திடீர் திருப்பம்: என்ன அது?
பிரியாணி கடையில் வழங்கப்பட்ட உணவில் புழு: வழக்கில் திடீர் திருப்பம்: என்ன அது?

சேலத்தில் பிரியாணி கடையில் சாப்பிட்ட உணவில் புழு இருந்ததாக புகார் அளித்த இளைஞர்களை கைது செய்த காவல்துறையினருக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். உணவில் புழு இருந்ததை, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

கடந்த 25ஆம் தேதி, சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள பிரியாணி கடையில், தனியார் கல்லூரி மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது பிரியாணிக்கு வழங்கப்பட்ட தால்சா எனப்படும் சாம்பாரில், புழு இருப்பதாக மாணவர்கள், கடையின் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். அதை பொருட்படுத்தாமல், மற்ற வாடிக்கையாளர்களுக்கும் உணவு பரிமாறியுள்ளனர்.



இதனால் கடையின் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் உணவை சோதனைக்காக எடுத்துச் சென்றனர். இதனிடையே, பணம் பறிப்பதற்காக கடையை பற்றி பொய்யான புகார் பரப்பியதாகக் கூறி, உணவில் புழு இருந்ததாக குற்றம்சாட்டிய மூன்று மருத்துவர்கள் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, திடீர் திருப்பமாக, உணவில் புழு இருந்ததை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து பிரியாணி கடையின் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் மாணவர்களை கைது செய்த காவல்துறையினரை நீதிபதி கடுமையாக கண்டித்துள்ளார்.




Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com