பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை - முன்விரோதம் காரணமா..?

பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை - முன்விரோதம் காரணமா..?

பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை - முன்விரோதம் காரணமா..?
Published on

விழுப்புரத்தில் மின்கம்பத்தில் ஏறி வேலை செய்துகொண்டிருந்த ஒருவரை இரண்டு நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் மரவேலை செய்து வந்தார். இன்று காலை தங்கள் பகுதியில் உள்ள மின்கம்பத்தில், ஏணியை வைத்து மேலே ஏறி வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், ஏணி மீது ஏறி சங்கரின் காலில் வெட்டியுள்ளனர். இதனால் நிலை தடுமாறி சங்கர் கீழே விழுந்தார்.

இதையடுத்து அவரது தலைப்பகுதியில் அந்த இரண்டு நபர்களும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆரோவில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சங்கரின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சில நாட்களுக்கு முன்னர் சங்கர் அதேபகுதியில் சிலருடன் சண்டையிட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, முன்விரோதம் காரணமாக அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com