நகைக்காக பெண்ணின் தலை துண்டிப்பு: முட்புதரில் வீசிய கொடூரம்

நகைக்காக பெண்ணின் தலை துண்டிப்பு: முட்புதரில் வீசிய கொடூரம்
நகைக்காக பெண்ணின் தலை துண்டிப்பு: முட்புதரில் வீசிய கொடூரம்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே நகைக்காக நட்பாக பழகி‌ பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ரேவதி. கணவரை பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இதனிடையே அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த மாரியப்பன் என்பவருடன் ரேவதிக்கு அறிமுகம் ஏற்பட்டது. ரேவதியிடம் நகைகள் இருப்பதை தெரிந்துகொண்ட மாரியப்பன், அதனை திருட திட்டமிட்டு ரேவதியிடம் மிகுந்த நட்பு உணர்வுடன் பழக ஆரம்பித்திருக்கிறார்.

சம்பவத்தன்று, வேலூர் மாவட்டம் வாலாஜாவில் உள்ள சிவன் கோயிலுக்கு ரேவதியை மாரியப்பன் அழைத்து சென்றுள்ளார். கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, ஒளித்துவைத்திருந்த கத்தியால் ரேவதியை குத்தி அவர் அணிந்திருந்த நகைகளை மாரியப்பன் திருடியிருக்கிறார். மேலும் ரேவதியின் கழுத்தை துண்டித்த மாரியப்பன் அதனை முட்புதரில் வீசி அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இதனையடுத்து போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடியதில் மாரியப்பன் பிடிபட்டார். விசாரணையில் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். அவரிடம் கைப்பை, செல்போன், கொலைக்கு பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com