வீட்டுக்கு வெளியே உறங்கிய பெண் அடித்துக் கொலை

வீட்டுக்கு வெளியே உறங்கிய பெண் அடித்துக் கொலை
வீட்டுக்கு வெளியே உறங்கிய பெண் அடித்துக் கொலை

வீட்டுக்கு வெளியே உறங்கிக்கொண்டிருந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே டி.சாலப்பாளையம் பகுதியில் உள்ள பூசாரிக்காட்டில் வசித்து வருபவர் ராஜலட்சுமி. வயது 45. தனது மகன் கண்ணன் என்பவருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கிய ராஜலட்சுமி மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அருகில் இருந்த வீட்டை தாழ்ப்பாள் போட்டு விட்டு இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நகைக்காக கொலை நடந்துள்ளதா..? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றுதா..? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை அமைத்தும் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com