மூதாட்டி மண்ணெண்ணை ஊற்றி எரித்து கொலை: கணவர் கைது

மூதாட்டி மண்ணெண்ணை ஊற்றி எரித்து கொலை: கணவர் கைது

மூதாட்டி மண்ணெண்ணை ஊற்றி எரித்து கொலை: கணவர் கைது
Published on

அரியலூரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டி எரித்து கொலை செய்யப்பட்‌‌டுள்ளார். இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

முட்டுவாஞ்சேரி கிராமத்தில் 70 வயது மதிக்கத்தக்க மங்களம் என்ற மூதாட்டி தனது மகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டினுள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களின் மீது மண்ணெண்னை ஊற்றி தீ‌வைத்துள்ளனர். இதில் மங்களம் உயிரிழந்தார். அவரது மகள் கலைச்செல்வி பலத்த தீ காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்‌. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மங்களத்தைத் தீவைத்து எரித்த அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக முதலில் மூதாட்டியின் கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கொடுத்த தகவல்கள் போலீசாருக்கு சந்தேகத்தை வரவழைத்ததால் போலீசார் மங்களத்தின் கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com