மகளை மணம் செய்து தர மறுத்த தாயை வெட்டிய இளைஞர் போலீசில் சரண்

மகளை மணம் செய்து தர மறுத்த தாயை வெட்டிய இளைஞர் போலீசில் சரண்

மகளை மணம் செய்து தர மறுத்த தாயை வெட்டிய இளைஞர் போலீசில் சரண்
Published on

சென்னை கிண்டி நரசிங்கபுரம் 4வது தெருவை சேர்‌ந்தவர் ரேவதி(45). இவரது கணவர் ராமசந்திரன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ரேவதி தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். அத்துடன் கிண்டியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை பார்த்து வந்தார். 

இதனிடையே ரேவதியின் மூத்த மகள் ஜீவிதாவிற்கும், கிண்டி மசூதி காலனியில் கார் ஓட்டுநர் வினோத் என்பவருக்கும் திருமண‌ம் செய்ய கடந்த ஓராண்டுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்டது. பின்னர் வினோத்தின் நடவடிக்கை சரியில்லை என்பதால் திருமணம் செய்து கொடுக்க ரேவதி மறுத்துவிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக கிண்டி போலீசில் புகார் செய்யப்பட்டு திருமணம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து வினோத்-ஜீவிதா இடையே மீண்டும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் வினோத் மீண்டும் ரேவதியிடம் வந்து தனக்கு ஜீவிதாவை திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதற்கு ரேவதி மறுத்து மகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர் வினோத், மீண்டும் மீண்டும் ரேவதியை தொடர்புகொண்டு திருமணம் செய்துகொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் விடாப்பிடியாக இருந்த ரேவதி, தன் மகளை வினோத்திற்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளர். இதனால் ரேவதி மீது வினோத்திற்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் ரேவதி நேற்றிரவு 8 மணியளவில் வேலை முடிந்து வீடு திரும்பியபோது கிண்டி வண்டிக்காரன் தெருவில், நண்பர்களுடன் சேர்ந்து வினோத், ரேவதியை வழிமறித்து பெண் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. பின்னர் அவர் தன்னிடம் இருந்த கத்தியால் ரேவதியின் கழுத்து, மார்பு பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ரத்த வெள்ளத்தில் ரேவதி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.  

இச்சம்பவம் குறித்து வ‌ழக்குப்பதிவு செய்த கிண்டி காவல்துறையினர் ரேவதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச்சூழலில் கொலை செய்துவிட்டு தப்பி ஒடிய வினோத் கிண்டி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதனையடுத்து அவரிடம் போலீசார் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com