காதலனுடன் வாழ பெற்றக் குழந்தையையே கொலை செய்த இளம்பெண்! அதிரவைக்கும் வாக்குமூலம்

காதலனுடன் வாழ பெற்றக் குழந்தையையே கொலை செய்த இளம்பெண்! அதிரவைக்கும் வாக்குமூலம்

காதலனுடன் வாழ பெற்றக் குழந்தையையே கொலை செய்த இளம்பெண்! அதிரவைக்கும் வாக்குமூலம்
Published on

கேரளாவில் காதலுடன் சேர்ந்து வாழ்வதற்காக, பெற்ற குழந்தையையே கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் கண்ணூர் தையில் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். இவரது மனைவி சரண்யா. இவர்களின் ஒரு வயது குழந்தை லியான் அப்பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் இருந்து பிணமாக மீட்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கணவன் - மனைவியிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது மனைவி சரண்யா தனது கணவர்தான் குழந்தையை கொலை செய்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில் காதலுடன் சேர்ந்து வாழ பெற்ற குழந்தையை தாயே கொலை செய்துள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்தது. மேலும், அந்த பழியை தனது கணவர் மீது சுமத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து சரண்யா அளித்த வாக்குமூலத்தில், “எனது காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டேன். இந்த பழியை எனது கணவன் மீது சுமத்தவும் முடிவு செய்தேன். இதனால் 3 மாதமாக என்னிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த கணவன் பிரணவை வீட்டுக்கு வர வைத்து இரவு வீட்டிலே தங்க வைத்து இரவு இருவரும் குழந்தையுடன் ஒரே அறையில் தூங்கினோம்.

கணவர் தூங்கியதை உறுதி செய்த பிறகு குழந்தையை வீட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரை தடுப்புச் சுவரில் தூக்கி வீசினேன். குழந்தை இறக்காததால் மீண்டும் கீழே இறங்கி மீண்டும் குழந்தையை தூக்கி வீசினேன். குழந்தை இறந்ததை உறுதி செய்தபிறகு வீட்டுக்கு சென்று எதுவும் தெரியாததுபோல் கணவனுடன் படுத்துக்கொண்டேன்”எனத் தெரிவித்தார்.

இந்த விசாரணையின்போது, பல முறை சரண்யாவிடம் அவரது காதலன் செல்போனில் அழைத்து பேசியுள்ளார். இந்த அழைப்புக்களை சோதனை செய்ததில் இந்த கொலைக்கும் காதலனுக்கும் தொடர்பில்லை என்பதும், காதலனுக்கு தெரியாமலே சரண்யா இந்த செயலை திட்டமிட்டு செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும், சரண்யாவின் காதலனுக்கு வேறொரு காதலி இருப்பதும் அவரை திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதும் தெரியவந்தது. சரண்யாவை திருமணம் செய்வதாக அவர் உறுதியளிக்காததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சரண்யாவை கடற்கரை பகுதிக்கு அழைத்துச்சென்ற போலீசார் அங்கு தடயங்களை சேகரித்தனர். அப்போது சரண்யாவின் பெற்றோர் உட்பட அனைவரும் சரண்யாவை தூக்கிலிட வேண்டும் என கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தொடர்ந்து சரண்யாவை கண்ணூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com