ஈரோடு: துப்பாக்கியை அழுத்திய சிறுவன் - பெண்ணுக்கு நேர்ந்த துயரம் - அண்ணன்கள் கைது

சங்ககிரி அருகே கழுகை விரட்ட வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து தங்கை உயிரிழந்த நிலையில், அண்ணன்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Brothers
Brotherspt desk

செய்தியாளர்: பாலகிருஷ்ணன்

ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா கட்டயகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (35), கார் ஓட்டுநரான இவருக்கும் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வேங்கிபாளையம் பாப்பாங்காட்டை சேர்ந்த செல்வராஜ் மகள் தமிழரசி என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், ரித்திக் ஸ்ரீ (10), என்ற மகனும், தனிஷ்கா ஸ்ரீ (6), என்ற மகளும் உள்ளனர். தமிழரசி தனது கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்ககிரியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு வந்து விட்டார்.

Tragedy
Tragedypt desk

இந்த நிலையில் நேற்று தமிழரசியின் அண்ணன் சரத்குமாரும், அவரது பெரியப்பா மகன் சதீஷ்குமாரும் வீட்டருகே உள்ள பகவதி அம்மன் கோயில் முன்பு கோழிக் குஞ்சை தூக்க வரும் கழுகை விரட்ட ஏர்கன் துப்பாக்கியில் குண்டை போட்டு மரத்திற்கு கீழ் உள்ள திண்ணையில் வைத்திருந்துள்ளனர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சரத்குமாரின் நான்கு வயது மகன், துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்தியுள்ளார். அதிலிருந்து வெளியேறிய குண்டு அங்கு சென்று கொண்டிருந்த தமிழரசியின் வயிற்றில் பட்டு படுகாயமடைந்தார்.

Brothers
சென்னை: ஆணவப்படுகொலை செய்யப்பட்ட காதல் கணவர் - மன உளைச்சலில் மனைவி எடுத்த விபரீத முடிவு

ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தமிழரசியின் கணவர் முருகன் சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் ஏர்கன் துப்பாக்கியில் குண்டைபோட்டு மரத்தின் கீழ் வைத்திருந்த குற்றத்திற்காக சரத்குமார் (34), சதீஷ்குமார் (38)ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com