\
நீதிமன்றத்தில் ஆஜரான தஷ்வந்த் மீது பெண்கள் சரமாரி தாக்குதல்

நீதிமன்றத்தில் ஆஜரான தஷ்வந்த் மீது பெண்கள் சரமாரி தாக்குதல்

நீதிமன்றத்தில் ஆஜரான தஷ்வந்த் மீது பெண்கள் சரமாரி தாக்குதல்
Published on

செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல் நடத்தினர்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கொலையாளி தஷ்வந்தை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் இன்று அழைத்து வந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் தஷ்வந்த் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் இருந்து தஷ்வந்தை மீட்ட போலீஸார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். 

இதையடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்து ஆதரவாக ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் விஜயகுமார் விலகினார். அப்போது தஷ்வந்திற்காக வாதாட வழக்கறிஞர்கள் உள்ளனரா என நீதிபதி கேட்டபோது, தனது வழக்கில் தானே வாதாட இருப்பதாக தஷ்வந்த் பதிலளித்தார். அதனால் இலவச சட்ட உதவி மையத்தை அணுக தஷ்வந்துக்கு நீதிபதி அறிவுறுத்தினார். முன்னதாக தஷ்வந்த் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பில் தஷ்வந்த் வைக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com