நகை கொள்ளை புகார் கொடுத்த பெண் தற்கொலை... திருமணத்தை மீறிய உறவினால் விபரீதம்

நகை கொள்ளை புகார் கொடுத்த பெண் தற்கொலை... திருமணத்தை மீறிய உறவினால் விபரீதம்

நகை கொள்ளை புகார் கொடுத்த பெண் தற்கொலை... திருமணத்தை மீறிய உறவினால் விபரீதம்
Published on

20 சவரன் நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றதாக புகார் கொடுத்த பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சோமனூர் பகுதியில் சீனிவாசன், கங்கா தேவி தம்பதியர் வசித்து வந்தனர். கடந்த செவ்வாய்கிழமை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்த கங்கா தேவி, தனது அழகுநிலையத்தில் புகுந்த கொள்ளையர்கள் சிலர் 20 சவரன் நகைகளைத் திருடிச் சென்றதாகக் கூறினார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புகார் கொடுத்த பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, அதில் பல திடுக்கிடுகள் தகவல்கள் வெளிவந்ததாக போலீசார் கூறுகின்றனர். கங்காதேவிக்கு வேறொரு நபருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ள நிலையில், அந்த நபரிடம் தனது 20 சவரன் நகைகளை அவர் கொடுத்துள்ளார். அதனை மறைப்பதற்காக கொள்ளை சம்பவம் நிகழ்ந்ததாக நாடகமாடிய கங்காதேவி, விசாரணையில் உண்மை அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அப்பெண்ணின் காதலனைக் கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com