\
கொலையில் முடிந்த வாக்குவாதம்: அத்தையைக் குத்திக்கொன்ற இளைஞர்!

கொலையில் முடிந்த வாக்குவாதம்: அத்தையைக் குத்திக்கொன்ற இளைஞர்!

கொலையில் முடிந்த வாக்குவாதம்: அத்தையைக் குத்திக்கொன்ற இளைஞர்!
Published on

சென்னை கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரது அத்தை குணசுந்தரி, கணேஷின் வீட்டுக்கு வந்ததாகவும், அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றியதால் காய்கறி நறுக்கும் கத்தியால் குணசுந்தரியை கணேஷ் குத்தியதாக கூறப்படுகிறது. உடனடியாக கணேஷ் தப்பியோடியுள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், கணேஷ் அதே பகுதியில் உறவுக்கார பெண் ஒருவருடன் முறையற்ற உறவில் இருந்ததாகவும், அதனை குணசுந்தரி தட்டிக்கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.  தப்பியோடிய கணேஷை போலீசார் தேடி வரும் நிலையில் இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com