\
உ.பி: சண்டை முற்றியதால் கணவனை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட பெண்

உ.பி: சண்டை முற்றியதால் கணவனை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட பெண்

உ.பி: சண்டை முற்றியதால் கணவனை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட பெண்
Published on: 

உத்தரபிரதேசத்தில் கணவனுடன் ஏற்பட்ட சண்டை முற்றியதால் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மனைவி பின்னர் தன்னையும் சுட்டுக்கொண்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குஸ்மா தேவி(43). இவருடைய கணவர் பூரான் சிங் யாதவ்(45). தக்‌ஷின் காவல்நிலையத்துக்கு உட்பட்ட ஃபல்வாடி பகுதியில் வசித்துவரும் இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த தம்பதிக்கிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டிருக்கிறது. திங்கட்கிழமை இருவருக்குமிடையே ஏற்பட்ட சண்டை முற்றியதால் எரிச்சலடைந்த குஸ்மா தேவி, வீட்டிலிருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து கணவரின் தலையில் சுட்டு கொலை செய்துள்ளார். பின்பு தன்னையும் சுட்டுக்கொண்டுள்ளார்.

வெளியே சென்றிருந்த மகள்கள் இருவரும் வீடு திரும்பியபோது தந்தை இறந்து கிடப்பதையும், தாயார் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் அதிகாரி அஜித்குமார் பாண்டே மற்றும் குழுவினர் குஸ்மா தேவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கின்றனர். ஆனால் அங்கிருந்து ஆக்ரா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அந்த பெண் உயிரிழந்துவிட்டார்.

வீட்டிலிருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளை கைப்பற்றிய போலீஸார் தங்கள் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com