கொதிக்கும் எண்ணெய்யை கணவன் மீது ஊற்றிய காதல் மனைவி!

கொதிக்கும் எண்ணெய்யை கணவன் மீது ஊற்றிய காதல் மனைவி!

கொதிக்கும் எண்ணெய்யை கணவன் மீது ஊற்றிய காதல் மனைவி!
Published on

போதையில் கொதிக்கும் எண்ணெய்யை கணவன் மீது ஊற்றிய காதல் மனைவி கைது செய்யப்பட்டார்.

புனேவை சேர்ந்தவர் ஜெயா ஷெரியா. வயது 35. சேல்ஸ்வுமன். மும்பை சென்றுவிட்டு ரயிலில் புனே திரும்புவது வழக்கம். அப்போது அவருக்கு பழக்கமானவர் பரத். மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் இவருக்கும் ஜெயாவுக்கும் ரயிலில் காதல் மலர்ந்தது. பின்னர் திருமணம் செய்துகொண்டனர். ஜெயாவுக்கு இது 2-வது திருமணம். திருமணத்துக்குப் பின் பரத் மும்பையிலும் ஜெயா புனேவிலும் இருந்தனர். வாரம் ஒரு முறை புனே வருவார் பரத். 
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஜெயாவுக்கு பிறந்த நாள். அன்று புனே வந்த பரத், கேக் வெட்டி மனைவியின் பிறந்தநாளை கொண்டாடினார். இரவில் சாப்பிட்டுவிட்டு இருவரும் மது குடித்தனர். அப்போது ஜெயா, தானும் மும்பை வந்துவிடுவதாக பரத்திடம் கூறினார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம். பிறகு தூங்க சென்றுவிட்டார் பரத். 

போதையில் இருந்த ஜெயாவுக்கு தூக்கம் வரவில்லை. நள்ளிரவில் எண்ணெய்யை கொதிக்க வைத்தார். அதை தூக்கிவந்து பரத்தின் உடலில் கொதிக்க கொதிக்க ஊற்றினார். இதையடுத்து பரத் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் ஓடி வந்தனர். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு நெஞ்சு, வயிறு மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மும்பை சயான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 
போலீசார் ஜெயாவை கைது செய்துள்ளனர். தன்னை அடித்ததால் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதாக போலீசில் கூறியுள்ளார் ஜெயா. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com