கணவரைக் கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி! மும்பை அருகே பயங்கரம்!

கணவரைக் கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி! மும்பை அருகே பயங்கரம்!

கணவரைக் கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி! மும்பை அருகே பயங்கரம்!
Published on

கணவரைக் கொன்று செப்டிக் டேங்கில் வீசி மூடிய, மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ளது பாய்சர். மும்பை அருகே உள்ள இந்தப் பகுதியில் வசிப்பவர் ஃபரிடா பார்தி. வயது 43. இவரது வீட்டில் பாலியல் தொழில் நடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து, மும்பை கிரைம் போலீசார் அங்கு திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது நான்கு பெண்கள் மீட்கப்பட்டனர். ஃபரிடா பார்தி கைது செய்யப்பட்டார். 

பின்னர், அவர் மட்டும் இந்த தொழிலை நடத்தி இருக்க மாட்டார். அவருக்கு பின்னால் வேறு யாரும் இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது கணவர் உட்பட பலரை கொலை செய்திருப்பது போலீசாருக்குத் தெரிய வந்தது. பாலியல் தொழில் செய்வதற்காக, ஃபரிடா, தனது கணவனை கொன்று உடலை வீட்டு செப்டிங் டேங்கில் போட்டு மூடியுள்ளார். இந்தச் சம்பவம் 13 வருடத்துக்கு முன் நடந்துள்ளது. 

இதையடுத்து அவர் வீட்டுக்கு மீண்டும் சென்ற போலீசார், செப்டிங் டேங்கில் இருந்து எலும்புக் கூடை கைபற்றினர். அதை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். கணவரை கொன்றது எப்படி என்று ஃபரிடா போலீசாரிடம் விளக்கியுள்ளார். கணவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது, மண்டையில் தாக்கி கொன்றதாகக் கூறியுள்ளார். அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவனை மனைவியே கொன்று செப்டிங் டேங்கில் வீசி மூடிய சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com