\
திருமணமாகி 3 மாதத்தில் நடத்தையில் சந்தேகம்... மனைவி தூங்கும்போது கொடூரமாக கொலை செய்த கணவன்

திருமணமாகி 3 மாதத்தில் நடத்தையில் சந்தேகம்... மனைவி தூங்கும்போது கொடூரமாக கொலை செய்த கணவன்

திருமணமாகி 3 மாதத்தில் நடத்தையில் சந்தேகம்... மனைவி தூங்கும்போது கொடூரமாக கொலை செய்த கணவன்
Published on

திருமணம் ஆகி மூன்று மாதத்தில் மனைவியை குத்துவிளக்கால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த நபரொருவர். அவரை கைது செய்துள்ளது காவல்துறை.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கலை பகுதியை சேர்ந்தவர் அனீஷ் (35). இவர் ஆலப்புழை மாவட்டத்தை சேர்ந்த நிகிதா (25) என்பவரை மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வந்த இடத்துக்கு சென்று விட்டு சில வாரங்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வர்க்கலையில் அனீஷ் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிகிதாவை குத்துவிளக்கால் தலையில் அடித்துள்ளார்.

அப்போது நிகிதா சத்தம் போட்டதை கேட்டு அனீஷின் உறவினர்கள் அங்கு சென்றுள்ளனர். அப்போது ரத்தத்தில் மூழ்கி கிடந்திருக்கிறார் அனிஷா. அவரை உடனடியாக தூக்கிக்கொண்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்துளனர். இதை தொடர்ந்து வர்க்கலை காவல்நிலையத்தில் அனீஷின் உறவினர்களே காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விசாரணையில் அனீஷ் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் இருந்து வந்ததால் கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏர்ப்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com