\
ஏற்காடு லாட்ஜில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கள்ளக்குறிச்சி பெண்

ஏற்காடு லாட்ஜில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கள்ளக்குறிச்சி பெண்

ஏற்காடு லாட்ஜில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கள்ளக்குறிச்சி பெண்
Published on

சேலம் மாவட்டம் ஏற்காட்டிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் கணவரின் சகோதரரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய். இவரது அண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில், விஜய் தனது அண்ணனின் மனைவி மஞ்சுவோடு திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, விஜய்க்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது. இந்த நிலையில் விஜய் தனது அண்ணியோடு நேற்று காலை ஏற்காட்டில் உள்ள தனியார் விடுதிக்கு வந்து தங்கியுள்ளார். ஆனால், இன்று காலை மஞ்சு குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக விஜய் ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டனர்.

தொடர்ந்து விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவால் தனிமையில் தங்கியிருந்த இருவருக்குமிடையே பிரச்னை எழுந்த நிலையில் மஞ்சு தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com