\
ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக ஆன்லைன் மோசடி - ரூ5 லட்சம் இழந்த பெண்

ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக ஆன்லைன் மோசடி - ரூ5 லட்சம் இழந்த பெண்

ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக ஆன்லைன் மோசடி - ரூ5 லட்சம் இழந்த பெண்
Published on

வெளிநாடுகளில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி குறிப்பிட்ட தொகையைக் கட்டச் சொல்லி பிறகு ஏமாற்றிவிட்டு செல்லும் சம்பவம் தொடர்ந்து நடந்துவருகிறது. அந்த வரிசையில் புனேவை சேர்ந்த ஒரு பெண்ணை ஆன்லைன் மோசடி கும்பல் ஒன்று ஏமாற்றியுள்ளது.

புனேவைச் சேர்ந்த 47 வயது பெண்ணிடம் ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 5.11 லட்சத்தை ஏமாற்றியுள்ளனர். விசா விண்ணப்பித்தல், விசா ஸ்டாம்பிங், வேலை அனுமதி, மருத்துவக் காப்பீடு, போக்குவரத்துச் செலவு மற்றும் பிற தேவைகளுக்கு எனக் கூறி ஒரு வங்கிக் கணக்கைக் கொடுத்து மோசடி கும்பல் ஒன்று பணம் பெற்றுள்ளது.

பணத்தைப் பெற்றபிறகு அவர்களிடமிருந்து எந்த விவரமும் வரவில்லை. அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் போகவே இவை அனைத்தும் போலி என அறிந்து அந்த பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com