ஃபோனில் ஆபாச படம்: கணவனை விளாசிய மனைவி மருத்துவமனையில் அனுமதி!
ஃபோனில் ஆபாசப் படம் பார்த்த கணவனை திட்டிய மனைவி கடுமையாகத் தாக்கப்பட்டார்.
ஐதராபாத்தில் உள்ள துண்டிகல் பகுதியை சேர்ந்தவர் உமர் பாஷா (30). இவர் மனைவி ரேஷ்மா சுல்தானா (23). இவர்களுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. வாடகை கார் ஓட்டுனரான பாஷா, மொபைல் போனில் அடிக்கடி ஆபாச படம் பார்ப்பாராம். வழக்கம் போல நேற்று முன் தினமும் பார்த்துள்ளார். எட்டிப்பார்த்த ரேஷ்மாவுக்கு கோபம் வந்தது. ‘எப்ப பார்த்தாலும் இதே வேலையா போச்சு. இப்ப அதை நிறுத்தறீங்களா, இல்லையா?’ என்று வார்த்தையால் விளாசினார். கேட்கவில்லை பாஷா. பிறகு வைஃபை இணைப்பைத் துண்டித்த ரேஷ்மா, ஃபோனை பிடுங்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த பாஷா, ரேஷ்மாவை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். முகம், கண்கள் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்தார் ரேஷ்மா. பின்னர் காரில் அழைத்துச் சென்று பஞ்சகட்டாவில் உள்ள ரேஷ்மாவின் அம்மா வீட்டில் விட்டுச் சென்றுவிட்டார்.
அதிர்ச்சி அடைந்த ரேஷ்மாவின் அம்மா வீட்டினர், உடனடியாக பஞ்சகட்டா போலீசில் புகார் கொடுத்துவிட்டு யசோதா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து வருகிறது. போலீசார் வழக்குப் பதிவு செய்து பாஷாவை தேடி வருகின்றனர்.